Sunday, August 15, 2010

முதல் கவிதை

அலுவலக காதல்.....
***************************************************************************************
இரண்டு முறை குளியல்....
மூன்று வாசனை சோப்பு...
நான்கு வகை வாசனை ஸ்ப்ரே....
ஐந்து முறை அயன் பண்ணிய சட்டை....
ஆறு மணி வரை காத்திருப்பு...
ஒரு முறை கூட திரும்பவில்லை அவள்...
*************************************************************************************
அவள் ஆடைகளுக்கும் என் மீது கோபம்....
என் கண்கள்பட்டே...
வண்ணம் போய்விடுவதால்.......
*********************************************************************************** எந்திரன் படம் பார்வைக்கு வர...
150 கோடி...!!!
என்னை எந்திரமாகும் உன் பார்வைக்கு...
எத்தனை கோடி....??
*************************************************************************************
*அலுவலக காதல் - காதல் சொன்ன விதம்**

அன்று இரவு நீண்டு இருந்தது....
மனதிற்குள் ஆயிரம் கேள்வி....
சோதனை செய்து பார்க்க முடியாத வேள்வி...
அணைத்து கேள்விக்கும் ஒரே பதில் அவளிடம்...

எப்படி காதலை சொல்வது....
அவளின் கண்களை எப்படி வெல்வது....
என்றும் இல்லாமல் 5 மணிக்கே விழித்தேன்....
எதிர்மறை எண்ணங்களை அழித்தேன்.....

வானத்திற்கும் அன்று போதை போல....
கொஞ்சம் மப்பாக தோன்றியது....
சூரியன் தோன்றி மறைத்தது........
காதல் மறையாமல் நின்றது....

பேருந்து வரும் நேரமானது....
செல்லும் 15 நிமிடம் பாரமானது....
அவள் வர இன்னும் 10௦ நிமிடம் ஆகும்....
வரும் வரை இதயம் மெல்ல சாகும்....

அந்த 10 நிமிடம் உலகம் பளிச்சிட்டது....
அலுவலக தேநீர் கூட சுவைத்தது.....
அவள் வரும் நேரம் நெருங்கியது....
என் உலகம் அவள் நோக்கி சுருங்கியது.....

மலர்கள் பூக்கும் சத்தம்.....
மழலை நடக்கும் ஒலி....
மனதில் இனிய வலி...
இவை அவள் வருகைக்கு அடையாளம்....
எப்போதும் போல ஒரு புன்னகை வெளியிட்டாள்....

சொல்லிவிட நினைத்தேன்....
மடி கணினி அணைத்தேன்....
அவளை நோக்கி நடந்தேன்....
அந்த அரை நொடி பயணம்....
வாழ்விலேயே மிக நீண்ட பயணம்....

காதல் கவிதை தீட்டினேன்....
ஆசையுடன் அவளிடம் நீட்டினேன்....
படித்தாள்.....
ஆறுதலான பதில் சொல்வாள் என நினைத்தேன்....
"ஆணியே புடுங்க வேணாம்" என்று சொல்லிவிட்டாள்.....

**கவிதை சரவெடி திரு***