Friday, October 22, 2010

சொல்லாமலே

சொல்லாமலே..(ஒரு காதல் கதை)........

சந்துருவுக்கு ஒரு விசிதிரமமான நோய்....வாழ்கையிலேயே மூண்டு வார்த்தைதான் அவனால் பேசமுடியும்....அப்படிப்பட்ட சாபம்.....23 வருடமாக ஒரு வார்த்தை கூட பேசாமல் கழித்த அவனுக்கு...சுவாமி கில்மானந்தா பரிகாரம் சொன்னார்.... ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்தல் சாபம் நீங்கிவிடும் என்று....அதுவும் இன்னும் இரண்டு நாட்களில்....ஊரெங்கும் தேடினான்.....இரண்டு நாட்களில் ஜென்னி' ஐ பார்த்தான்.....அழகானவள்....அடக்கமானவள்....காதல் சொல்ல நினைத்தான்...அவள் எப்போதும் செல்லும் இடங்கள்..காலை 8 மணி .கோயில்......அவனும் சென்றான், சொல்ல முடிய வில்லை....காலை 10 மணி....அவள் வேலை செய்யும் இடம்...அவனும் சென்றான்....சொல்ல முடியவில்லை....மாலை 7 மணி....அவள் அடிகடி செல்லும் உணவகம்....அவனும் சென்றான்....தயங்கினான் சொல்லவில்லை.....மணி இரவு 9....அவள் வீட்டை நெருங்கி கொண்டு இருந்தால்....இதை விட்டால் வேறு வாய்ப்பு இல்லை....இரண்டு நாட்கள் முடிய போகிறது....முடிவெடுத்தான்.....அவள் வீட்டு வாசல் அருகில்...முதல் வார்த்தை "ஐ".... இரணடாவது வார்த்தை "லவ்"....மூன்றாவது வார்த்தை "யூ"...மூன்று வார்த்தைகள் முடிந்தது....சாபம் சென்றது...வாழ்வு வந்தது...வசந்தம் வந்தது....23 வருட துன்பம் முடிந்தது' என்று அவன் நினைக்க!!!!

அவள் சொன்னதோ "pardon"........

- திரு