மிக சிறந்த டீ யை'தேடி,
(இந்த தொகுப்பு நான் இதுவரை சென்ற இடங்களில் அருந்திய டீ'களை ஒப்பீடு செய்து எழுதியது)
சிலருக்கு சிகிரெட்.... சிலருக்கு ஆல்கஹால்.... சிலருக்கு பாக்கு , என்னக்கு டீ , என்னை நான் டீயின் அடிமை என்றுகூட நினைத்ததுண்டு....
சிறந்த டீகளை தேடிய அனுபவத்தை பகிர்கிறேன்
முன்னரே சொல்லியது போல் டீ என்பதுபலரின் டெய்லி பியூஎல் (Fuel)....மிக மிக குறைவான அளவிற்கு எதிர்விளைவு தரக்கூடிய ஒரு அடிக்ஷன் (addiction).....ஒரு டீயின் மகத்துவம் அதை தயாரிப்பவரின் மனநிலையில் இருந்து தொடங்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.....சிறந்த டீ யை சில சமயம் மாஸ்டரின் முகத்தை வைத்தே கண்டுபிடித்து விடலாம்....சில நேரங்களில் ருபாய் 10 ஆழ வேண்டி இருக்கும்....டீ என்ற பெயரில் இனிப்பு நீரோ....இல்லை பாலோ கொடுப்பதுண்டு....ஒரு நறுமணம் நிறைந்த டீ யை குடிக்கும்போது....அதன் நறுமணம் .....நம் கண்ணில் நிறையும் நிறம் ....நாக்கில் கிடைக்கும் சுவை.....கையில் இதமான சூடு...இந்த நான்கும் ஒரு சேர மூலையில் எங்கோ ஒரு நியூரான்'இல் ஏற்படுத்தும் ஒரு impulse மின்னோட்டமே டீ எனப்படும்.....
டீ பழக்கம் என்னுடைய 10 ஆம் வகுப்பில் ஆரமித்தது, என்னுடைய அப்பா அறிமுகப்படுத்தியது, ஸ்கூல் முடித்து வீட்டுக்கு வந்தவுடன் உடனே கோபால் சார் டியூஷன், நடுவில் நேரம் மிக குறைவு, முகம் கழுவிக்கொண்டு பவுடர் அடித்துக்கொண்டு, கேப்டன் சைக்கிள் கேரியரில் இல் பாலமுருகன் ஸ்டோர்ஸ் நோட்டுகளை கிளிப் செய்து இன்னும் 10 நிமிடத்தில் டியூஷன் ....நடுவில் அந்த நாளின் மிக சிறந்த ஒரு பானம் கவிதா டீ ஸ்டாலில் டீ, மற்ற டீ'கள் சர்க்கரை தண்ணீராய் இருந்தபோது , கவிதா டீ ஸ்டாலில் டி உண்மையான டீ, டீக்கு பால் திக்காக இருக்கக்கூடாது, நீர்த்துபோயும் இருக்ககூடாது....அனுபவம் வாய்த்த ஒருவராலதான் அப்படி ஒரு டீ போட மன்னிக்கவும் வடிவமைக்க முடியும் (இட்ஸ் எ டிசைன்)...அப்படி ஒரு அனுபவம் கவிதா டி ஸ்டால் டீ....அது அடுத்த 3 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது.....
பின்பு கோவை PSG கல்லூரி நாட்கள், புதிய இடம் என்பதால் சேர்த்த முதல் இரண்டு வாரம் எங்கும்வெளியே செல்லவில்லை, ஹாஸ்டல் மெஸ் டி மட்டுமே, டீயின் கன்சிஸ்டன்சி எனது எதிர்பார்ப்பில் இருந்தாலும், சுவை சிறிது குறைவு, காரணம் டீயின் மகத்துவம் அதனுடய (Freshness) பிரெஸ்ன'ஸில் தான்உள்ளது...நாம் விரும்பும்போது பாலையும் டிகாக்ஷன்'நயும் சேர்த்து நயம்பட புனைவதே ஒரு டீயின் இலக்கணம்....ஹாஸ்டல் மெஸ் டீக்கள் இந்த வரையறைக்கு அப்பாற்பட்டவை ....5 மணிக்கு போட்டால் 7 மணிவரை பிளாஸ்கில் (Flask)தூங்கும்.....7 மணிக்கும் டீ' யானது ஜூஸ் ஆனபின் எடுத்துவிடுவார்கள்....ஒரு ஈர்ப்பு வரவில்லை.It was not appealing....
பின்பு அறிமுகமானவர்தான், பீளமேடு NMB பேக்கரி டீ.... எப்போதும் டீ, என்றென்றும் டீ, இன்டெர்னல்ஸ் என்றாலும் டீ, செமஸ்டர் என்றாலும் டீ, செமஸ்டர் லீவிலும் கூட்டம் குறைவாயினும் டீ ,,,காலை 4 மணி முதல் இரவு 12 மணிவரை டீ....PSG 'இல் சேர்த்து 2008 இல் முடிக்கும் வரை என்னுடைய ஆபத்பாந்தவன் NMB டீ மட்டுமே....இவர்களுடைய சிறப்பு என்னவென்றால்....காலை 4 மணிக்கு டீ குடித்தாலும் இரவு 10 மணிக்கு டீ குடித்தாலும்....அதன் திடம் (consistency) குறைவதே இல்லை....சாதாரணமாக காலையில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் டீ இரவு 8 மணிக்கு மேல் பவர் ஸ்டார் ஆகிவிடும்....பால் தொடர்ந்து கொதிப்பதால் caramelize ஆக தொடங்கிவிடும்....சில நேரங்களில் டீ பாலில் போட்டார்களா இல்லை அமுல் பேபி பௌடரில் போட்டார்களா என குழப்பம் வரும் .....NMB இன் சிறப்பே எப்போது பிரெஷ் டீ கிடைக்கும் .......இன்றும் கோவை சென்றால் முடிந்தவரை NMB டீ யும் அவர்களின் காலை மசாலா பண்ணும் தவறுவது இல்லை .....
கல்லூரி முடிந்தவுடன் மூன்று மாதம் இடைவெளி வேலையில் சேருவதற்கு....இடைப்பட்ட காலங்கள் அவ்வளவு சுகமாக இல்லை....முடிந்த கல்லூரி....மும்பை வேலை....அவ்வப்போது வரும் குழப்பம்...இரண்டே ஆறுதல்....ஒன்று---மும்பை வேலை என்றாலும் கல்லூரி நண்பர்கள் உடன் இருக்கிறார்கள்....இரண்டு---திருவாரூர் டீ ....இந்த சமயங்களில் என்னுடைய நண்பர் பாபு வால் அறிமுக படுத்தப்பட்ட டீ ....ரயில்வே ஸ்டேஷன் பிரென்ட்ஸ் பேக்கரி டீ....இருவரும் ஒரு ஓட்டை டிவிஎஸ் 50 இல் இரவு 10 மணிக்கு சென்று செட் க்ளாசில் strong டடீ குடிப்பது.......அகா அகா ....அந்த காலத்தில் அமிர்தம் என்பர்களே அது இதுதானா என நினைத்துண்டு.....இவர்களுடைய டீ இன்றும் அப்படியே இருக்கிறது ....இந்த கடையின் இன்னொரு சிறப்பு ....கவனிப்பு....அங்கு வேலைசெய்பவர்களை நான் சுமார் 12 வருடமாக பார்த்து வருகிறேன்....சிலர் மாறவே இல்லை....அவர்களுடைய கவனிப்பும் கூட...
அதே காலங்களில் எதேச்சையா அறிமுகம் ஆனா இரண்டு சொர்கங்கள்...மன்னிக்கவும் டீ ஸ்டால் கள், தெற்குவீதி ராமு டி ஸ்டாலில் (சபாபதி பள்ளி எதிரில்) மற்றும் அஞ்சுகம் டீ ஸ்டாலில் (பழைய வருவாய் அலுவலகம் எதிரில் )....முதலாவது டீ இந்த இயற்கை நறுமணத்தை மாற்றாமல் உண்மை தன்மை குறையாம டீ'யை டீ'யாக படைப்பது....அதிலும் அவர்களுடய owner போடும் டீ'இன் மக்தும் அட அட....இரண்டாவது டீ'யின் மார்டன் வெர்சன்...டீயுடன் சிறிது சாக்லேட் பவுடர் கலந்து கொடுப்பார்....டீ சுவை சா, சாக்லேட்'இன் சுவை....இரண்டும் சேர்த்து மாறி மாறி நாக்கில் நடனமாடும்....இவர் கிளாஸ் உபயகிப்பது இல்லை....எவர்சில்வர் தம்பளர்...அது சுவையை ஒரு படி கூட்டும் ....
இப்படி திருவாரூர் டீ கடைககள் அனைத்துமே அதனுடைய தனித்தன்மை குறையாமல், அள்ள அள்ள அமிர்தமாய் வழங்கின....இவற்றுற்கு அல்லாம் மணிமகுடமாய் அமைந்தது விஜயபுரம் அலி டீ ஸ்டால் (பழைய SBT அருகில், அலி டீ ஸ்டால் என்பது ஒரு informal பெயர் என்று நினைக்கிறன், பெயர் தவறு எனில் மன்னிக்கவும்), இவர்களின் சிறப்பு, டீ தூளுக்கு சூடு தெரியாமல் டிகாக்ஷன் எடுத்து விடுவார்கள்....அதனால் அவ்வளவு பிரெஷ் அவ்வளவு அரோமாட்டிக்....சில நேரங்களில் இரண்டு டீ கூட குடிப்பதுண்டு....கடை தெரு என்பதாலும் கூட்டம் அள்ளும் என்பதாலும் ...பால் எப்போது பிரெஷாக இருக்கும்....டீ'இன் ருசியின் அது தெரியும்....
வாழ்க்கை மிக சிறந்த டீ களின் நடுவில் சென்றுகொண்டு இருந்தபோது அந்த சோகம் நிகழ்ந்தது.....மும்பை....2008....மும்பை டீ சிறிது வித்தியாசமானது.....சாதாரண டீ அங்கு கிடைப்பது அரிது...மசாலா டீ போன்று ஒன்று போடுவார்கள்....ஏலக்காய் இஞ்சி ஜாதிக்காய் இவற்றையெல்லாம் சேர்த்து ஒரு 1 மணி நேரம் கொதிக்கவைத்து (லிட்ரல்லி 1 hour), கரும்பு சக்கை போல் அதை பிழிந்த கொடுப்பார்கள்....வித்தியாசமா இருக்கும்.....ஒரிஜினல் டீ இலையின் மனம் வேண்டும் என நினைப்போருக்கு..மும்பை டீ சற்று ஏமாற்றமாக இருக்கும்....எனக்கு பெரிதாக ஈர்ப்பு இல்லை...இருந்தாலும் நாட்கள் நகர்ந்தன
2011 - சென்னைக்கு மாற்றலாகி, நண்பன் ராஜேஷ்'இன் ரூமுக்கு தற்காலிகமாக 2 நாள்....கீழ்பாக்கம் அருகில் அவர் ரூம்....6 மணிக்கு ரூம்க்கு சென்றோம்....6.02 க்கு டீ கடை....அந்த டீ' யை முகர்த்தபோது மட்டுமே நிஜமா நம் ஊருக்கு வந்ததை உணர்வுபூர்வமாக நம்பினேன்...அப்படி ஒரு டீ
7 வருடம் ....பல கடைகள் பல பல டீக்கள்....