Friday, April 2, 2010

பையா

நீண்ட நாட்களாக அழுக்கு சட்டையும், அழுக்கு லுங்கியுமாக நடித்து வந்த "பருத்தி வீரன்" தற்போது ஜீன்ஸ, டி-ஷர்ட் போட்டு நடித்துள்ளார். ஆயிரத்தில் ஒருவனில் டம்மி பீஸ்'ஆக நடித்த கோபம் அவருடைய கண்களில் தெரிகிறது...என்னவாவது செய்து யூத் ஹீரோ வரிசையில் இடம் பிடிக்க நினைத்து இந்த படத்தில் நடித்துள்ளார்.

கதை நாயகி தமன்னா, டாமெக்ஸ்போட்டு கிளீன் செய்த வாஷ் பேசின் போல பளிச்சென்று உள்ளார்.....மேலும் படத்தில் இரண்டு வில்லன் கோஷ்டிகள் , சாஹி கிரில்லில் மூன்று கிரில் சிக்கன் சாப்பிட்டுவிட்டு, மேலும் கணபதி மெஸ்ஸில் பதினைந்து பரோட்டா சாப்பிடும் அளவுக்கு திறமை உள்ள "தெலுங்கு வில்லன்கள் ", காசி எக்ஸாம்மில் கூட காப்பி அடிக்க தெரியாத டம்மி "ஹிந்தி வில்லன்கள்" ....ஹீரோவுக்கு ஒரு மொக்கை பிரண்ட்ஸ் க்ரூப்...ஹாப்பி டேஸ படத்தில் நடித்த "ஷ்ராவ்ஸ்" இதில் மங்கலான பிகராக நடித்துள்ளார்....மேலும் ஒரு லான்செர், பத்து டாட்டா சுமோவும் நடித்துள்ளன....

சரி கதைக்கு வருவோம்....கார்த்தி ஒரு வேலையில்ல "பையன்"..தமன்னா ஒரு வேலை இல்லாத பொண்ணு...பெங்களூரில் தமன்னாவை சைட் அடித்து சுத்தும் கார்த்தி..ஒரு சூழ்நிலையில் அவரையே மும்பைக்கு காரில் அழைத்து selgiraar ...பிகரை madakka "ரோட்டில் ரிப்பேர் ஆனா காரை சரி செய்கிறார்...ரோடு கிராஸ் செய்பவர்களுக்கு வலி விடுகிறார்....சின்ன பையன்களுக்கு குச்சு மிட்டாயும்...குருவி ரொட்டியும் வாங்கி தருகிறார்....இத்தனையும் ஒரே பாட்டில்...."தமிழ் படம்" சிவாவே இதற்கு தேவலாம்....

தமன்னா ஒரு பெரிய சிக்கலில் மாட்டிகொண்டு இருக்கிறார் என்று கார்த்திக்கு தெரிய வருகிறது....வில்லன் கோஷ்டிகள் துரத்த கார்த்தி, தமன்னா'வை கைப்பற்றினார என்பதுதான் "கதை"...

எத்தனை வில்லன் வந்தாலும் பரந்து, ஜம்ப் பண்ணி அடிப்பதில் "அயனின்" தம்பி என்று நிரூபிக்கிறார் கார்த்திக்....மேலும் இந்த ரணகலத்துலயும் ஒரு குதுகலம் என்பது போல டூயட் பாடுகிறார்கள்...பாடல்கள் குட்....அதுவும் யுவன் பாடும் இரண்டு பாடல்கள் சூப்பர்.. பாடும்போது அவருக்கு இருந்த வயிற்று வலி அவர் குரலில் தெரிகிறது....

படத்தில் சண்டை காட்சிகள் சூப்பர்..ஆனால் வில்லன் துரத்தும் போதெல்லாம் கார்த்தி ரோட்டில் வண்டி ஒட்டாமல் ஏன் காட்டுக்குள் ஓட்டுகிறார் என தெரியவில்லை...படத்தில் மிக மிக விறுவிறுப்பான காட்சி..கார்த்தியும் தமன்னாவும் குடை பிடித்து கொண்டு வில்லன் கண்களில் படாமல் தப்பிக்கும்போது, "தமிழ் படத்தில்"தில் சிவா மச்சம் ஒட்டிகொண்டு வில்லன்களிடம் இருந்து தப்பிப்பதே தேவலாம் என நினைக்க தோன்றுகிறது...

படத்தின் 98% காரிலேயே ஓடிவிடுகிறது...அஜித்(ஜி) , விக்ரமுக்கு(பீமா) கொடுத்த வெற்றி படங்களை போலவே இந்த படத்தையும் கார்த்தி'கு வெற்றி படமாக ஆக்க வேண்டும் என்ற எண்ணம் லிங்கு சாமியிடம் தெரிகிறது...

மொக்கை வில்லன்கள்...டாட்டா சுமோ...வள வள பேச்சுக்கள்....தேவையில்லாத செண்டிமெண்ட்ஸ் இதையெல்லாம் நீக்கிவிட்டு பார்தால் "பையா" ஒரு சிறந்த படம்....பட் மேலே கூறியவற்றை நீக்கினால் "இண்டர்வல்" மட்டுமே மிஞ்சும்...

மொத்தத்தில் பையா....அட போய்யா!!!

9 comments:

  1. Chance ae illa machan...weightaana review!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Super review. Keep them coming. Hope sura releases soon for you to review. :-)

    ReplyDelete
  4. I really enjoyed thuje..:)

    டாமெக்ஸ்போட்டு கிளீன் செய்த வாஷ் பேசின் போல பளிச்சென்று உள்ளார்.....மேலே கூறியவற்றை நீக்கினால் "இண்டர்வல்" மட்டுமே மிஞ்சும்...

    :)... Good work da!

    ReplyDelete
  5. semma super review da.... veera kumar basayala sollanuma scintillatingly hilarious

    ReplyDelete
  6. sumar 2500 adigalai, 150 villangaluku kuthirupar... athil 30 villangalai 2 muraiyum 10 villangalai 3 muraiyum adithar... ithu mattum illamal 30 maavatathil pala pala theatrelil 4 showkalil koodi makklai kondrar

    ReplyDelete
  7. Veerakumar basay nu puthu basaya!!!!!!!!

    ReplyDelete
  8. thiru ungakitta irundhu niraya yethir paarkarom....

    ReplyDelete