விடுமுறையில் இருந்தாலும்...
விடாத சமூக பணியின் இடையிலும்....
கைபேசி மணி அடித்தது....
கள்ளி நீதான் என எடுத்தால்....
கபோதி என் முதலாளி (ஆங்கிலம்) ...
கைபேசி அணைத்தேன்...
உன்னை நினைத்தேன்...
உலகை மறந்தேன்....
காலை நீ வரும் சமயம்...
உயிரும் உடலும் சேர்த்து உன் பக்கம் குவியும்...
விண்மீன் கூட்டம் ஓர பார்வை பார்க்கும்..
என் காதல் சொல்ல சென்றேன்...
வேண்டாம் என்ற அவளிடம் ...
காதல் செய்து பார்..
மனம் மலராகும்...
வானம் தலை முட்டும்...
இரவில் நிலா கவி சொல்லும்...
உன் மனமே உன்னை வெல்லும்...
வண்ணத்தில் மூழ்குவாய்..
கண் மூடிக்கொண்டு கனவில் நீநதுவாய்...
என்றோ கேட்ட பாடல் எப்போதும் ஒலிக்கும்..
அனைவரையும் வெல்வாய்...
உன்னிடம் தோற்பாய்...
உயிர் இரண்டாகி, மனம் ஒன்றாகி
இப்படிப்பட்ட
காதலில் காய்ந்து பார் என்றேன்
கண்ணாடியில் போய் மூஞ்சை பார்
என சொல்லிவிட்டாள்...
Bad Girl
திரு
No comments:
Post a Comment