Tuesday, January 25, 2011

Movie Review - Oru Kalloriyum Sila Manavargalum

Movie Review - ஒரு கல்லூரியும் சில மாணவர்களும் (Based on a true story)

இந்த பகுதியில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைதும் கற்பனையே, யாரையும் குறிபிடுவன அல்ல...

Hi Hi all திரை விமர்சனம் நிகழ்சிக்கு உங்களை வரவேற்கிறோம், நீண்ட நாட்களாக விமர்சனம் செய்ய தகுத்த படங்கள் வரத்து குறைவானதால், நீண்ட நாட்களுக்கு முன் வெளி வந்து வெற்றி பெற்ற ஒரு படத்தின் விமர்சனம் இங்கு..."கல்லூரி"....சில திரை படங்கள் மிகுந்த பொருட் செலவில், மிக பிரமாண்டமாக எடுகபட்டும்கூட flop ஆகி விடுவது நமக்கு தெரிந்ததே...அனால் வெகு சில படங்கள் குறைந்த செலவில், யாரென்றே தெரியாத hero, hero'இன் வைத்துகொண்டு பிரமாண்ட வெறி பெரும்..."கல்லூரி" இரண்டாம் வகையை சேர்த்தது...அனைவரும் புதுமுகம் என்பது குறிப்பிட தக்கது....விமர்சனம் எழுதுபவர் படத்தின் முதல் 20 நிமிடங்களை மிஸ் பண்ணி விடாததால் அதற்கான விமர்சனம் இங்கு இடம் பெறவில்லை...

10th std முதல் செமஸ்டர்ல் தொடங்குகிறது....படத்தின் முதல் ஒரு மணி நேர வில்லனாக Jakey நடித்துள்ளார்....பார்வையாலேயே அனைவரையும் பயமுறுத்துகிறார்....தன்னை பெரிய chess சாம்பியன் என்று நினைத்து கொண்டு அடிகடி observation நோட்டில் 'செக்' போடுகிறார்.......எப்போதும் கணிணியில் உகர்த்து கொண்டு அறிவியல் ஆராய்ச்சி செய்கிறாரோ என்று நினைக்கும்போது அவர் விளையாடுவது mario என்று தெரிந்ததால் அவர் டம்மி பீஸ் ஆகிறார்...

சொல்ல மறந்து விட்டேன் , இங்கு படிக்கும் அனைவரும் ஹீரோ, ஹீரோயன்ஸ் .முதல் பாதியில் வாரத்திற்கு ஒரு நாள் மதியம் ஹீரோக்கள் , ஹீரோயின்கள் அனைவரும் சிறப்பு ஆடைகளெல்லாம் அணித்து கொண்டு ஒரு தொழிற்சாலைக்குள் செல்கிறார்கள்.....காமரா வை வெளியில் வைத்து சூட் செய்யும்போது அனைவரும் எதோ சாதிக்க உள்ளே செல்கிறார்கள் என்று நினைக்க...சற்று கேமராவை உள்ளே வைக்கும்போது அனைவரும் உள்ளே உள்ள மரத்து நிழலில் உறங்கி கொண்டிருப்பதும், சிலர் தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை பேசி தீர்க்கும் பஞ்சாயத்து கூடமாக அந்த இடத்தை பயன்படுத்துவதும் மனதை வேதனை படுத்துகிறது ......அனால் one of the ஹீரோவும் , one of the ஹீரோயினும் அங்கும் சென்று கூட எதோ எழுதி கொண்டே இருகிறார்கள்....அதுவும் அந்த ஹீரோ உலகத்தில் கிடைக்கும் அணைத்து வன்னகளையும் வைத்து எழுதுகிறார்...இவர்கள் இருவரும் படம் முடியும் வரையிலும் எழுதி கொண்டே இருகிறார்கள்...தொழிற்சாலையை விட்டு வெளியே வரும்போது அனைவரையும் வரிசையில் நிற்க வைத்து அங்கு உள்ள காவலர் உடம்பில் எதோ தேடுகிறார்...ப்ரீ மெடிக்கல் செக் அப் பண்ணுகிறார்கள் என்று நினைகும்போதுதான் தெரிகிறது உள்ளே இருந்து எதாவது உருவி கொண்டு போகிறார்களா என்று சோதனை செய்கிறார் என்று!!!...ஏற்கனவே யாருமே இல்லாத தொழிற்சாலையில் யாருக்கோ tea ஆத்தி கொண்டு இருகிறார்கள் ....இதில் சோதனை வேறு என எண்ண தோன்றுகிறது !!!

இப்படியே 10 வது முடிந்து 11 வகுப்பு செல்ல, கதையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது...வில்லன்களே இல்லாத படம் என்று நினைக்கும்போது...ஆரம்பத்திலிருந்தே வில்லன்கள் இவர்களை தொடர்து கொண்டு இருப்பது லேசாக தெரிய வருகிறது....மற்ற படங்களை போல் TATA சுமோ, வெட்டாத முடி, வெட்டி சத்தம் போடும் வில்லன்கள் இதில் இல்லை. மாறாக நடிகர்கள் தங்கி இருக்கும் உணவகத்திலேயே வில்லன்கள் இருகிறார்கள் , ஆள் வைத்து அடிப்பது, கத்தியை காட்டி மிரட்டுவது போன்றவற்றை செய்யாமல் வெறும் சப்பாத்தி, தோசை போட்டே அனைவரையும் கொல்வது கொடூரம்....அதிலும் அந்த நூடுல்ஸ்....கொடுமையிலும் கொடுமை....நூடுல்ஸ் கண்டு பிடித்தவன் மட்டும் பார்க்க நேர்தால் அருகில் வைகபட்டிருகும் tomato சாஸை குடித்து தற்கொலை செய்து கொள்வான்....

இப்படியே தினமும் வகுப்புக்கும் , விடுதிக்கும் சென்று சென்று நொந்து நூலாகிப்போன வாழ்கையில் அதிரடி என்ட்ரி கொடுக்கிறார் 'மாசி' ...இது வரைக்கும் படத்தில் காமெடி இல்லையே என்ற குறையை போக்க ஆண்டவனே பார்த்து அவரை அனுப்புகிறார்....அவர் அடிக்கும் லூடிகளில் திடேரே கிழிகிறது...ஒரு காட்சியல் முதல் வரிசை பெஞ்ச்களை வரிசையாக போட்டு , இந்த பெஞ்ச தாண்டி நீயும் வரகூடாது , நாங்களும் வர மாட்டோம் என்று நடிகர்கள் அவரிடம் லந்து கொடுக்குபோது என்னதான் காமெடியனாக இருந்தாலும் இப்படியா செய்வது என மனம் வலிக்கிறது. அடுத்து சில காட்ச்கள் வாழ்க்கைக்கும் மறக்காது, அதுவும் ஒரு நாள் சில மாணவர்கள் கம்பியுட்டர் எதோ ப்ரோக்ராம் போடும்போது , மாசி அவர்களிடம் என்ன ப்ரோக்ராம் என்று கேட்கிறார். அதற்கு அவர்களோ "program for finding the position of the mouse, this program will find out whether the mouse is in the right side of the computer or the left side" என்று சொல்கிறார்கள். அதையும் அவர் நம்பி கொண்டு போகும்போது எங்கோ மெலிதாக "அந்த வானத்த போல மனம் படச்ச மன்னவனே" பாடல் ஒலிக்கிறது....தன்னுடைய ஒரு கையெழுத்தை சந்தேகப்பட்டு, அவர் போடாத 9 கையெழுத்தை "OK" என விடுவதாகட்டும், நீங்க கிளாஸ்ல பேசிக்கிட்டு இருந்தீங்கன பக்கதுல 2nd standard கிளாஸ் எடுகிற மேடம் என்னபத்தி என்ன நினைபாங்க ,என்று சொல்லும்போதும் பிரமாதமாக நடித்திருக்கிறார்..இல்லை இல்லை அந்த கேரக்டேரகவேவாழ்த்திருகிறார். வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு தகுதியானவர்.

படத்தில் மிக உருக்கமான காட்சி. ஹாஸ்டலில் ஒரு சிக்கன் briyani டோக்கன் வாங்கி , ஒரு தட்டில் பிரியாணியையும் வாங்கிவிட்டு, அந்த ஒரு தட்டையே காட்டி காட்டி 10 பேர் மாத்தி மாத்தி பிரியாணி சாப்பிடும்போது, அட இதை விட இந்தியாவின் வறுமையை எப்படி படத்தில் காட்ட முடியும்...hats off to the director...

12 'அம் வகுப்பு தொடங்குவதற்கு முன் அனைவர்க்கும் கழுத்தில் போடும் ID கார்டு தருகிறார்கள், முதல் நாள் அதை வாங்கி போட்டவுடன் ஹீரோகளுக்கு எதோ தங்க பதக்கத்தை போட்டுவிட உணர்வு ஏற்படுகிறது...அதுவும் லேடீஸ் ஆர்டிஸ்ட் அனைவரும் அதை எப்படி 24x7 போடுகிறார்கள் என கடைசி வரை படத்தில் சொல்லவே இல்லை,,,அதை போட்டு கொண்டால்தான் கல்லூரிக்கு உள்ளே விடுகிறார்கள்...அதுவும் கல்லூரி வாசலில் நிற்கும் காவலர் ஒருவர், அவருக்கு எதோ இந்திய பாகிஸ்தான் பார்டரில் வேலை பார்பதாக நினைப்பு, மாணவர்களிடம் மட்டும் ID card கேட்டது மட்டும் இல்லாமல் , ரோடில் கீரை விற்துகொண்டு போகும் கிழவியிடமெல்லாம் ID கார்டு கேடு அலப்பறை செய்கிறார்

சோகமோ துக்கமோ மாணவர்களை அனைவரும் கூடமாக சாஹி கிரில் கிளம்பிவிடுகிறார்கள். அருனச்சலாஸ் , முதலில் 35 ரூபாய்க்கு புல் அன்லிமிடெட் மீல்ஸ் கிடைக்கும்...இதை மோப்பம் பிடித்த சில மாணவர்கள் "சிக்கிடாண்ட, அவன சிதைசிடுவோம்" னு கிளம்புகிறார்கள்...மனசாட்சியே இல்லாமல் அவர்கள் சாப்பிடுவதை பார்த்த முதலாளி....35 ரூபாயை 50 ருபாய் ஆகுகிறார்....அப்போது "மச்சி அவன விட கூடாது , கிளம்புங்க" என்று ஒரு கூட்டமே சென்று வண்டி வண்டியாய் சாப்டுகிரார்கள்...அதுவும் அந்த "ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் " மாணவர் சாபிட அப்பளம் மட்டும் 1000 ரூபாயை தாண்ட....அப்போது அந்த ஹோட்டல் முதலாளியோ "எங்க அம்மா அப்பவே சொல்லிச்சு , இவனுங்க இருக்ற எடத்துல அன்லிமிடெட் மீல்ஸ் போடாதனு!!!!" என்று கண்ணீர் வடிக்கிறார்...

இதில் நடித்திருக்கும் சில சீனியர் ஆர்டிச்டுகளை பற்றியும் சொல்லவேண்டும். இதோ வந்துடுவாரு, அவர் பாடம் எடுக்க வந்தா கலக்கல்தான் என்று "Faceup" பற்றி சீனியர் மாணவர்கள் ஹைப் ஏற்றுகிறார்கள். அவரோ எப்போதும் அதிக ஹைப்புடன் ரிலீஸ் ஆகி கடைசியில் பிளாப் ஆகும் விஜய் படம் போல ஏமாற்றுகிறார். இவருக்கு வேண்டுமென்றால் அந்த வருடத்தின் சிறந்த "புலி வருது" விருது கொடுக்கலாம் ...

சார்ஜிங் அண்ட் டிஸ்சார்ஜிங் என்ற இரண்டு வார்த்தையை வைத்துகொண்டு மின்னியல் பாடத்தை முடித்த "மன மந்திரி" , தலையும் புரியல வாலும் புரியல உங்களுக்கு எதாவது புரியுதாப்பா? என்று எந்த வித சங்கலமும் இல்லாமல் கேட்கும் "Bolt" நிஜமாகவே bold. இவருக்கு வேண்டுமென்றால் "இது நம்ம ஆளு விருது" கொடுக்கலாம்,

இப்படி பல பேர் இந்த படத்தில் வந்து போகிறார்கள். கொடுத்த காசுக்கு அதுகமாக வேலை செய்யும் காவலர் "வால்ட்டர்" , கதவை தட்டினால் ***, ***, *** போன்ற நச்சத்திர வார்த்தைகளால் திட்டும் Snack bar தாத்தா, எதெல்லாம் சூட் கேஸில் வைக்க கூடாதோ அதையெல்லாம் அதில் வைக்கும் ""Shift Minus"" மாணவன் போன்றவர்கள் படம் முடிந்த பின்னும் மனதில் நிற்கிறார்கள்...

எவளவோ சோதனைகளை சாதனைகளாக்கி படம் இனிதே முடிகிறது....

A Review by,
Thiru

2 comments:

  1. ultimate...

    laughed for almost all the lines...
    especially for:
    Shift Minus
    Faceup
    *** and jill
    Bolt
    மன மந்திரி

    ReplyDelete
  2. hi anna,
    theerai vimarsanum patiya kilaputhu. etha padikum podhu ennoda mun varisy pal ellam theriyura mari serichitya irunthan. antha mouse program, indiavin varumaiku sandru lam padichitu vairu valika sirichan. arumaya screenplay pannirukinga. kathaya sonna vitham superosuper. tamila use pannthau athavida paratathakathu. ungaludiya in tha post makalin ethir parpaiyum thandum alavirku irku.

    ReplyDelete