Wednesday, June 22, 2011

கவிதை எழுதுவது எப்படி - A complete Guide (Part-2)



சில நேரத்துல சீரியசாகவும் கவிதை எழுதணும்....

Task : நைட் 8 மணிக்கு, பீச் பக்கதுல ஒரு பெண்ணை பார்த்தேன், செம பிகர்,அவள பாத்துடே இருக்கும்போது, டக்குனு மழை பேய ஆரம்பிச்சுட்டு ...இதை எப்படி கவிதையா எழுதுறது!!!!....இத போய் எப்படி கவிதையா எழுதுறதுன்னு யோசிச்சா கவித வராது...காத்துதான் வரும்...மணி ரத்னம் படம் எடுக்றார் ...இது அப்புடிஅது இப்படின்னு யோசிச்சா எடுக்குறார்....சும்மா போற போக்குல...பழைய ராமாயனத்த இங்கிலீஷ் டயலாக் போட்டு மூணு மணி நேரம் ஒட்டல...அப்படிதான்!!!!!

அலுவலக துக்கம் முடிந்தும்...
ஆறுதலான தூக்கமும் வருவதற்கு
இடையிலான
இனிய நேரம்......
கடல் மணலை
அலை வறுட பார்த்திருக்க, என்
மனம் வறுட காத்திருந்தாள்,அவளால்
வருடப்பட்ட மனம்
நெருடபட்ட கணம்
கடற்கரை காற்றை மீறி
உயிர், உடல் கரை தாண்டி
அவள் வழி செல்ல
அவள் விழியோ
என் மன கேள்விகளுக்கு
விண் வழி பதில்சொல்ல தொடங்கியது, மழையாக

Simply,
Thiru

No comments:

Post a Comment