Tuesday, June 21, 2011

How to Write Kavithai - A Complete Guide by Thiru (Part-1)




காதல் சோகத்த அப்படியே போகிற போக்குல எப்படி கவிதையா சொல்றது??.... இப்ப பாக்கலாம்

இப்போ ஒரு பொண்ண propose பண்றீங்க, நீ இல்லேன்னா வாழ்க்கையே இல்ல, நீதான் என் உயிர் அப்டி, இபுடின்னு சொல்லி, கடைசில அந்த பொண்ணு, "இல்ல சார் என்னக்கு ஏற்கனவே கல்யாணம் fix பண்ணிட்டாங்க" சொல்லிடுச்சு.......இந்த சோகத்த எப்படி கவிதையா சொல்வது....
...............
அன்பே ஆருயிரே
உன் முன்பே என் உயிரே
சிரித்தாய்...
விழுந்தேன்...
முறைத்தாய்...
வழிந்தேன்...
அழைத்தாய்...
மகிழ்ந்தேன்...
வெண்மேகம் மறைக்கும் நிலா
முன்ஏதும் இல்லாதது போல்
முன் வந்து கொல்லாமல் கொன்றது..
உயிர் என் உள்ளிருந்து எழுந்து
உயிரே, உயிர் நீதான் என்றது..
சொல்ல கேக்காமல் உன்னிடம் சென்றது....
உன்னகும் எனக்கும் பந்தம் நிகழ்ந்தால்
உன்னையும் சேர்த்து,
என் உயிரும் எனக்கு சொந்தம்.....
அனைத்தையும் புரிந்து
தன்னை மறந்து
என் காதலை ஏற்பாள்
தன் மனம் கலக்க,
என் மனம் திறந்து காமி" என சொல்வாள் என நினைத்தேன்...
அல்ரடி கமிட் ஆயிட்டேன்
ஆள விடுறா சாமி" என சொல்லிவிட்டாள்

Thanks,

Simply,
Thiru

No comments:

Post a Comment