சோழ நாடு சோறு உடையது என்பார்கள்...சோழ நாடு, சிறந்த பல பரோட்டாக்களையும் உடையது. சுமார் 8 வருடத்திற்கு முன்பு, ஒரு நண்பரின் மூலம் அறிமுகம் ஆனது சிதம்பரத்தில் உள்ள நியூ மூர்த்தி கஃபே, எந்த வித பெரிய எதிர்பார்ப்பும் இல்லமால் சென்ற, அந்த முறை, வாழ்நாளிலேயே மறக்க முடியாத ஒரு உணவு அனுபவம் ஆனது.
முன்னோர்கள் சொன்னது போல, பாராட்டோவை நாம் தேடி போக வேண்டும், ஒரு நல்ல பரோட்டா, இலையில் வைத்தவுடனேயே நம்மை தாக்கும், அப்போது அது அப்படிப்பட்ட தாக்கம்
இடை இடையில் சென்னையில் இருந்து சொந்த ஊரானா திருவாரூர் செல்லும் வழியில், கண்டிப்பாக வண்டி நிற்கும் இடம் சிதம்பரம் மூர்த்தி கஃபே. என்ன பைபாஸ் போட்டு 1 மணிநேரம் குறைவாக இருந்தாலும், இந்த உணவின் தனித்துவம் எப்போதும் ஊருக்குள் கொண்டு வந்துவிடும்.
இந்தமுறை, சிதம்பரத்திலேயே தங்கும் வாய்ப்பு கிடைத்தது. விடுவோமா. நேற்று மீண்டும் மூர்த்தி கஃபே, சுமார் 4 - 5 ஆண்டுகளுக்கு பின். இரவு 10 மணிக்கு மேல் சென்றதால் கூட்டம் பெரிதாக இல்லை, சுமார் 4-5 பேர் இருந்தனர். ஒரு டேபிள் பிடித்து உக்கார்த்ததும் பசுமையான வாழை இலை வந்தது. எப்போதும் போல் பரோட்டாவும் இந்த கடையின் சிறப்பான பட்டர் சிக்கனும் ஆர்டர் செய்தோம்.
பணியாளர் ஒரு 5 பரோட்டாவை எங்களுக்கு வைத்துவிட்டு, பட்டர் சிக்கன் ரெடி ஆகிட்டருக்கு என்று சொல்லி சென்று விட்டார். சுமார் 10 நிமிடம் ஆனது வரவில்லை, பணியாளருக்கு ஆச்சர்யம், வைத்த பரோட்டா எங்கு சென்றதென்று, "நீங்க கோட்ட மொதல்லேந்து போடுங்கனு" சொல்லிவிட்டு, மேலும் 5 பரோட்டாவை வரவைத்தோம். இந்த முறை பட்டர் சிக்கனும் வந்தது.
அட அட கிண்ணம் வழிய வழிய, அழகாக கோழி துண்டங்களை மிதக்கவிட்டு, நல்ல தரமான வெண்ணயை ஒரு கரண்டி மிதக்கவிட்டு, அப்படியே கண் கொள்ளா காட்சி. வயிற்றில் ghrelin வண்டி வண்டியாக சுரக்க ஆரமித்து விட்டது. அளவில் குறைவின்றி, கிண்ணம் வழிய வழிய, நிறைய கோழி துடைங்களுடன், சூடாக மற்றும் வாசனையுடன்..அட அட.
மூர்த்தி கஃபே'யின் பரோட்டாவும், மிக தரமான எண்ணெயில் செய்யப்பட்டு, வெள்ளை பணியில், மின்னும் மாலை சூரிய ஒளிபோல, பொன்னிறத்தில் முறுகலுடன், மிருதுவான மற்றும் flaky 'யாக, பெரிய ரௌண்டாக இல்லாமலும், சிறிய ரௌண்டாக இல்லாமலும், சரியான அளவில் இருந்தது. ஏதும் இல்லாமலேயே ஏற்கனவே 2 பரோட்டா உள்ளே சென்று விட்டது, இப்போது பட்டர் சிக்கனுடன்.
பரோட்டாவை இரண்டு விள்ளல்கள் எடுத்து, வழித்து வரும் பட்டர் சிக்கன் கிரேவியை தோய்த்து, இரண்டு மூக்குகள் முக்கி, ஒரு பாதி ஊறியும், மறுபாதி ஊறாமல், மூன்று விரல்களுக்கு இடையில் நடனமாடவிட்டு, அப்படியே எடுத்து, வாயில் வைத்து, கண்ணை மூடிக்கொண்டு சாப்பிட்டால், அப்பப்பா Divine , Divine, Unlimited divine . வருடங்கள் சென்றாலும் மூர்த்தி கஃபேவின் தரம் சுவை மாறவே இல்லை. அளவில் கொஞ்சம் சுணக்கம், முதலாளி shrinkflation'க்கும் தப்பவில்லை.
சிதம்பரம் பக்கம் செல்பவர்கள், பைபாஸ் தவிர்த்து, நேரம் எடுத்து ஊருக்குள் சென்று சாப்பிட உகந்த, தரமான உணவகம் மூர்த்தி கஃபே. விலையும் சரியாக இருக்கும். gravy அதைத்தும் half portion வாங்கினால் போதுமானது. இங்கு கடாய் சிக்கன்'னும் ultimate சுவையில் இருக்கும். முட்டை சட்னி என்று ஒரு பதார்த்தம் உண்டு, முன்பு அபாரமாக இருக்கு, இப்போது கொஞ்சம் சுணக்கம்.
நண்பர்கள் சென்றால், கூட்டம் எதிர்பார்த்து செல்லவும், எப்போதும் நிறைவாகவே இருக்கும். நீங்கள் ஆர்டர் செய்த Gravy வரும்வரை, ஒரு கோப்பையில் Veg குருமா ஒன்று கொடுப்பார்கள், அதை மட்டும் பணியாளரிடம் வேண்டாம் என சொல்லிவிடுங்கள். Veg குருமா என்பது பரோட்டாவுக்கு நாம் செய்யக்கூடிய மிக பெரிய துரோகங்களில் ஒன்று.
முக்கியமாக, திருநெல்வேலி ஷாந்தி அல்லவா கடையின் போலிகள் போல, ஊருக்குள் நிறைய மூர்த்தி கஃபே'க்கள் முளைத்து உள்ளன. ஒரிஜினல் உணவகம் VGP தெருவில் அப்போல மருந்தகம் பின் புறம் உள்ளது. பார்க்கிங்கிற்கு பெரிதாக இடம் எல்லாம் இல்லை, கிடைத்த இடத்தில போட்டுவிட்டு செல்லவேண்டும். சென்றால் வாழ்க்கையில் பெறக்கூடிய சிறந்த உணவு அனுபவங்களில் ஒன்று சிதம்பரம் நியூ மூர்த்தி கஃபே.
Thiru



No comments:
Post a Comment