Saturday, November 22, 2025

ஈரோட்டில் பரோட்டா பயணம்

 

பரோட்டா சாப்பிடுவது என்பதுவெறும் பசிக்கு எதையோ சாப்பிடுவது போல அல்லஅது ஒரு பகட்டான அனுபவம்இட்ஸ் ஏன் எமோஷன்பொதுவாக மதுரை,   திருநெல்வேலிதூத்துக்குடிவிருதுநகர்காரைக்குடிபரமக்குடிநாகப்பட்டினம்,   நாகூர் பகுத்துகளில் பரோட்டா ருசி அள்ளும்பாண்டிய நாட்டில் மண்ணின் மனமும்காரைக்குடி,  பரமக்குடி பகுதியில் செட்டிநாட்டின் குணமும்தூத்துக்குடிகீழக்கரைநாகை பகுதிகளில் இஸ்லாமிய உணவு முறையின் fusion'னும்இப்படி ஒவ்வொரு   இடத்திலும்   பரோட்டா-சால்னா தன்னிகரற்ற ருசியுடன் கிடைக்கும்.

 

இதற்க்கு நேர்மார்சென்னையில் கிடைக்கும் பரோட்டா உணவுகொங்கு   பகுதியிலும் இப்படியேசிறந்த பல சமைக்கும் முறைகள்தனித்துவமான பல உணவுகள்   இருந்தாலும்கொங்கு பகுதியில் பரவலாக பரோட்டா-சால்னா உணவு மற்ற மேலே சொன்ன பகுதிகள் போல கிடைக்காது.   எல்லாவற்றிற்கும் மேலாககொங்கு பகுதியில் பரோட்டாவுக்கு தேங்காய் சட்னி   வைத்து சாப்பிடும்  முறையும் இருக்கும்சரத்குமாருக்குசிம்ரன் ஜோடியாக நடித்ததைப்போல , ரெண்டும் ஒட்டாது.

 

வெறும் பரோட்டாவுக்கென்று ஒரு சுவை உண்டுஅடுக்கு அடுக்காகமேல் பக்கம்   முறுகலாகஉன்பக்கம் மெதுவாக என்றுஒரு வடிவமும் உண்டுகொங்கு பகுதியில் பெரும்பாலும் உபயோகித்து பழையது ஆகிய தலையணை போல மொத்து மொத்து என்று இருக்கும்.

 

இந்த அனுபவத்தை மாற்றியதுஈரோடு கொங்கு பரோட்டா ஸ்டால்ஈரோடு நண்பர் ஒருவர் சொல்லியதால் இங்கு ஒரு 10 வருடம் முன்பு சென்றேன்இப்போது ஈரோடு போனால் இரண்டு முறை கொங்கு பரோட்டா ஸ்டால் லட்சியம்ஒரு முறை நிச்சயம்அதிக அலங்காரங்கள் இல்லாமல்ஊர் பகுதிகளில் இருக்கும் சாதாரண உணவக   அமைப்புவெளியே ஒரு பெரிய மைதானம் அளவுக்கு தோசை கல்,   பல முழுநிலவுகள் தரை இறங்கியதை போலதோசை கல் முழுவதும்   பரோட்டாக்களை போட்டு எடுத்துக்கொண்டே இருப்பார்கள்விற்றுக்கொண்டு   இருக்கும்.

 

இங்கு கிடைக்கும் அசைவ சால்னா aka குருமாதான் அட்டகாசம்சாதாரணமாக   குழம்பு போல கொண்டு வந்து கொடுக்காமல்,அசைவ குழம்பை ஒரு பெரிய இரும்பு சட்டியில் போட்டுமிதமான சூட்டில் சுண்ட செய்துஅதன் சுவையை இரு மடங்கு   கூட்டிசுட சுட நம்முடைய இலைக்கு பரிமாறப்படும்.


எப்போதுசென்றாலும்,2 பரோட்டாவும் , இங்கு கிடைக்கும் மட்டன் சுக்காவும் ஆர்டர் செய்துஇலையில்   சுட சுட கிடைத்தபின்பஞ்சு போன்ற மென்மையான பரோட்டாவைஅதற்கு வலி   இன்று பிய்த்துப்போட்டுசுவை கூட்டப்பட்ட சால்னாவை மலைச்சாரல் போல ஊற்றிஊறச்செய்துஒரு பெரிய பகுதியையே எடுத்துமட்டன் சசுக்காவின் ஒரு சில   துண்டங்களை எடுத்துவிரலைகளில் அதன் அமைப்பை அனுபவித்துவாயில்   போட்டு மென்று கண்ணை மூடினால்ஏனுங்க... இதானுங்க Divine !!! கணக்கில்லாத பரோட்டா, unlimited divine ....

 



பெரும்பாலும் ஈரோட்டுக்கு சென்றுஅங்கிருந்து பெருந்துறைக்கு சென்று   வேலை விஷயமாக திரும்புவோம்போகும்போதும் கொங்கு பரோட்டா ஸ்டாலில்,   திரும்ப வரும்போதும் நேரம் இருந்தால்மீண்டும் கொங்கு பரோட்டா ஸ்டால்'லே??

இப்போது ஈரோடு பக்கம் போவது முழுவதுமாக குறைத்துவிட்டதுஆனாலும் கொங்கு பரோட்டா ஸ்டாலின் அனுபவங்கள் மனம் மாறாமல் அப்படியேபர்ஸை பதம்   பார்க்காமல்அபாரமான ஒரு உணவிற்கு இங்கு செல்லலாம்.

 

இந்த பெயரையே நிறைய மாற்றம் செய்துநிறைய போலியான கடைகள் அந்த   பகுதியில் ஏராளம்ஒரிஜினல் கொங்கு பரோட்டா ஸ்டாலில்ஈரோடு KMCH க்கு   அருகில் உள்ளது.

 

நன்றி

No comments:

Post a Comment