'பிரியாணி" என்று பெயர் வைத்தால் பிரியாணி ஆகிவிட முடியுமா??. பத்து அடிக்கு ஒரு போஸ்ட் கம்பம் இருப்பதை போல, எங்கு பார்த்தாலும் எதோ ஒரு பெயரில் பிரியாணி கடைககள். அதும் இப்போது, அம்மாச்சி கடை, அம்மாவின் அடுப்பங்கரை, ஆச்சி வீடு, மாவின் மாட்டுக்கொட்டகை, மாமியார் வீடு மாடி, என பாரம்பரிய பெயர் கொண்ட,pathetic பிரியாணி கடைகள். சுவை இல்லை என்றாலும் நம் பர்ஸை பதம் பார்க்கும் கதைகள்தான் ஏராளம்.
ஒரு நீண்ட பயணத்தில் இந்த யோசனை, நல்ல பிரியாணி கிடைப்பது என்பது போக போக அரிதாகி வருகிறது. இப்படியே போனால் நம் எதிர்கால சந்ததிக்கு நாம் என்ன விட்டுச்செல்ல போக போகிறோம் என்று நினைக்கும்போது, நான் இறங்கியது திண்டுக்கல் ரயில் நிலையம். இந்த சோக நினைவுகள் நம்மை தாக்கக்கூடாது என்று என்று சென்ற இடம் திண்டுக்கல் வேணு பிரியாணி.
சிறிய, இடைஞ்சலாக கடை. கை கழுவி அமர்ந்தால், எப்போதும்போல நல்ல சுத்தமான மற்றும் பசுமையான வாழை இலை போடுவார்கள். நல்ல பெரிய இலையாகவே இருக்கும். கடை பெயர் சொல்வதுபோல, இங்கு பிரியாணி அமிர்தமாக இருக்கும். நானும் நண்பரும், ஆளுக்கொரு மட்டன் பிரியாணியும், இவர்கள் ஸ்பெஷல் மட்டன் கோலா உருண்டையும் சொல்லி அமர்தோம். நண்பருக்கு இது இங்கு முதல் முறை.
எப்போது சென்றாலும், இங்கு நிலவும் அந்த பிரியாணி வாசத்திற்ற்கு , திண்டுக்கல் நகரையே எழுதி கொடுக்கலாம். மற்ற கடைகள் போல, எல்லாம் கலந்த ஒருவித திகட்டும் வாசனைகள் இல்லாமல், நிறைந்த நெய்மணம் கொண்ட, பிரியாணி வாசனை, திகட்டாமல், இம்மி பிசகாமல் எப்போதும் அதே வாசனை. pure bliss என்று சொல்லுவதை இங்கே அனுபவிக்கலாம். எந்த ஸ்டார்ட்டர்ஸும் இங்கு தேவை இல்லை, இந்த வாசம் மட்டும் போதும்
வெள்ளை பேண்ட் மற்றும் வெள்ளை ஷர்ட் போட்ட ஒரு பணியாளர், நல்ல சந்தனமும் பொட்டும் அணிந்து , எங்களுக்கு பரிமாறினார். இரண்டு சிறிய குவளைகளில் பிரியாணி பரிமாறப்பட்டது. அதனுடன் இரண்டு நல்ல அளவில் கோலா உருண்டைகள். எங்கோ இருந்து வரும் பிரியாணி மனமே நம்மை மயக்கும், இப்போது நமக்கே நமக்காக ஒரு பிரியாணி, நம்முடைய இலையில். பணியாளர் நமக்கு ஒரு பெரிய குவளையில் டால்ச்சாவும், தயிர் பச்சடியும் அளவில்லாம் வைத்து சென்றார்.
சீராக சம்பா பிரியாணிக்கென்று ஒரு மனமும், ஒரு குணமும் உண்டு. நம்முடைய இலையில் இருந்த, குவிந்த நிலையில் பரிமாறப்ப பிரியாணியை, இரன்டு விரல்களால் அமுக்கி, லேசாக இலையில் பரவச்செய்து, பரவ செய்யும் போது கையில் படும் மட்டன் துண்டுகளை உணர்ந்து, விரல்களில் எடுத்து, அதனுடன் ஒரு சிறிய துண்டு கோலா உருண்டையும் சேர்த்து, சிறிது டால்ச்சாவும் தொட்டுக்கொண்டு, கண் குளிர, மனம் குளிர வாயில் போட்டால், கண்ணை மூடிக்கொண்டு மெதுவாக மென்றால், divine divine .
என்னதான் சுவை அபரிவிதமான இருந்தாலும், இவர்கள் தரும் அளவு மிக குறைவு. அடிக்கடி செல்வதால் எனக்கு பழகி விட்டது. முதல்முறை செல்பவர்கள், இவர்கள் ஏதோ பிரியாணி sample குடுக்கிறர்கள் என நினைக்கவும் வாய்ப்புண்டு. நன்கு சாப்பிடுபவர்களுக்கு, கண்டிப்பாக இரண்டு பிரியாணி தேவைப்படும். ஆனால் நான்கு பிரியாணி சாப்பிட்டாலும் திகட்டாக சுவை. சாப்பிட்டுவிட்டு கழுவினாலும், சுமார் 2 மணி நேரத்திர்ற்கு கையில் bliss இருக்கும். அருமையான மனம்
திண்டுக்கல் பக்கம் செல்பவர்கள் மிஸ் செய்யக்கூடாத இடங்களில் வேணு பிரியாணி முக்கியமானது. ஊருக்குள் இருந்தாலும் நல்ல பார்க்கிங் வசதி உண்டு. நல்ல பணியாளர்கள், நல்ல கவனிப்பும் உண்டு. சென்னையில் கிடைக்கும் quasi திண்டுக்கல் பிரியாணியை ரசிப்பவர்கள், இங்கு கண்டிப்பாக போகலாம், நல்ல அனுபவம் கிடைக்கும்.
திரு
No comments:
Post a Comment