
இப்படி ஒரு கதை களம் அமைக்க பாலாவால் மட்டுமே முடியும், இவரின் படத்தில் மட்டும் கதாபாத்திரங்கள் ஏன் வித்தியாசமாக இருக்கிறது என்று யோசிப்பதைவிட ....வித்தியாசமான மனிதர்களையும், அந்த மனிதர்களின் வித்தியாசப்பட்ட சூழலையும் கதாபாத்திரமாக அமைப்பது ப...ாலாவின் special. ஒரு மலை கிராமம், விஷால் (வால்ட்டர்), ஆர்யா (கும்புடுற சாமி), g .m.குமார் (highness), r .k (பிச்சைக்கார வில்லன்),, ஒரு இன்ஸ்பெக்டர், இரண்டு ஹீரோயின்கள் (பெயர் தெரியவில்லை) இவர்களை சுற்றிய கதை. யாருமே எதிர்பார்க்காத முறையில் என்ட்ரி தரும் விஷால், எந்த ஹீரோயிசமும் இல்லாமல் நடித்திருக்கும் ஆர்யா இருவரும் திருடர்கள், அதிலும் ஆர்யா பலே திருடன், G.M குமார் அவர்களின் ஜமீன் highness , இருவருமே highness மிக நெருக்கமானவர்கள், தன்னை மகனாக நினைக்கும் highness கொடுரூமாக கொலை செய்யப்படும்போது சீறுபவர்களே இந்த அவன் இவன்.
மசாலாவுகுள் விழுந்த விஷாலுக்கு இது once in the life படம், திருட முடியாமல் தவிப்பதும், ஆர்யாவின் கேலி பேசுக்கு குருமுவதும் ,போலீஸ் constable பெண்ணை சைட் அடிப்பதும், கோவம் வந்தால் தன்னுடைய ஆறு அடி கையால் எதிரியை விளாசுவதுமாக பிண்ணி எடுத்திருக்கிறார். கண்களை குவித்து வைத்து நடித்திருப்பதை தனியாக சொல்ல தேவையில்லை. highness கொலை செய்து தொங்க விட பட்டிருக்கும் மரத்தில் ஏறும்போதும், அவிழ்த கையிற்றை பிடிகாமுடியாமல் தானும் தண்ணீரில் குதிக்கும் போதும் "அட" போட வைக்கிறார். ஆர்யா காமெடிக்கு மாறுமே அதிக நேரம் செலவிடுகிறார், highness ஆகா வரும் குமார் முதற் பாதியில் ஏன் வருகிறார் அன்று தெரியாமல் இருக்கும்போது, இரண்டாம் பாதியில்அவரை சுற்றிதான் படமே என்று ஆகிறது, இரண்டாம் பாகத்தில் இதுவரை தமிழ் படங்களில் யாரும் செய்யாததை இவர் செய்திருக்கிறார்.
வழக்கமான பாலா படங்களை போல முதல் பாதி காமெடியாக செல்வதும், காவல் துறையை காமெடி துறையாக காட்டுவதும் இதிலும் உண்டு. முதல் பாதியின் காமெடி வசனங்களால் படம் நகர்கிறது ஆனால் படம் ஆரம்பித்து சரியாக 1 .38வது நிமிடம் தன்னுடைய கதாநாயகன் எப்படி பட்டவன் என்பதை பாலா காட்டும்போது அரங்கம் முதல் முறையாக அமைதியாகிறது. அந்த காட்சியில் திரையும் காண்பிக்கப்படும் ஆச்சர்ய முகங்களோடு அரங்கத்தில் இருந்தவர்கள் முகமும் மாறுகிறது. சூர்யா இதில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார், மைக் கிடைத்தால் வள வள என்று பேசும் சூர்யா இதில் அளவாக பேசுகிறார், பாலா என்பதாலோ என்னவோ!
ஆர்தத்ர் வில்சனின் ஒளிபதிவு உலக தரம், பசுமையான மலைகிராமம், இரவில் பெய்யும் மழை, கிளைமாக்ஸ் நடக்கும் சதுப்பு நில காட்சிகள் கூடுதல் பலம். இசை யுவன் ஷங்கர் ராஜா. தனியாக பாடல்கள் டூயட் இல்லாதது படத்தின் plus point . அதுவும் சில காட்சிகளில் பின்னணி இசையில் இளையராஜா இசை அமைத்திருகிராரோ என என்ன தோன்றும்.
அனால் கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படித்து, காலையில் shoe போட்டு, டக் இன் பண்ணி ஆபீஸ் போகும் சிலரையே பெண்கள் திரும்பி கூட பார்க்காத நிலையில், திருடர்களை எப்படி பெண்கள் லவ் பண்ணுகிறார்கள் என்பதில் பெரிய லாஜிக் ஓட்டை. அதிலும் ஒரு பெண், போலீஸ் கான்ஸ்டபிள். மேலும் highness ஏன் தனியாக வாழ்கிறார், அவருக்கும் அந்த judgeகும் என்ன நடந்தது, குடியும் கும்மாளமுமாக இருக்கும் highness ஏன் மாடுகளை விற்கும் பிச்சைகாரனிடம் திடீரென வம்புக்கு போக வேண்டும் என்பதை இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாம். முடிவாக உறவுகள் பிரிவதும், பிரிக்கபடுவதால் எழும் உணர்ச்சியின் அழுத்தமான வெளிப்பாடே அவன்-இவன்
Next National Award for best actor will surely come to tamil cinema.
Thanks for Reading,
Simply,
Thiru